Loading...
மன்னார், பாலத்தடி கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பிள்ளையார் சிலையொன்று இன்று சிக்கியுள்ளது.
குறித்த கடற்கரையில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார்.
Loading...
இதன்போது குறித்த வலையில் மர்மபொருள் காணப்படுவதாக கருதிய அவர், அதிலுள்ள மண்ணை அகற்றியபோது பிள்ளையார் சிலை அடையாளம் காணப்பட்டுள்ளது.இதனை பார்வையிடுவதிற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் பலர் ஒன்று கூடியுள்ளனர்.
மேலும் குறித்த பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா? அல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா? என்பது தொடர்பில் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Loading...