யாழ்ப்பாணம் – கொடிகாமம், கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவ மாணவிகளை பாடசாலை அதிபர் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் மாணவி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடு செல்லும் வழியில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.இந்த நிலையில் குறித்த மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.
போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதன்போது மாணவியின் உள்ளங்கையில் கண்டல் காயங்கள் இருப்பதை அவதானித்த வைத்தியர் இது குறித்து வினவியுள்ளார்.“பெற்றோர் கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை பாடசாலை அதிபர் மைதானத்தில் வைத்து முச்சக்கர வண்டியின் கம்பி ஒன்றால் கடுமையாக தாக்கினார் என்றும், இதனால் ஏற்பட்ட காயங்களே இது” என்றும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் அவசர பிரிவு இலக்கத்திற்கும், தென்மராட்சிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.