தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழைய புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இதேவேளை இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்ளிட்ட 8 அமைப்புக்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாறன், கமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல், அன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் அல்லது பரதன், சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது கணேஸ் அல்லது சாம்ராஜ், பொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன், வேலாயுதம் பிரதீப்குமார் அல்லது கலீபன், சிவராசா சுரேந்திரன் அல்லது வரதன், சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன்.மற்றும் திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன், மகேஸ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மென்டிஸ் அல்லது திருக்குமரன், சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர், டோனி ஜியான் முருகேசபிள்ளைஆகியோருக்கு இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.