2018ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு சி பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கில்லான் மொபாபே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.