முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கும் 4 மருந்தகங்களை மூடுமாறு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நேற்று அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
மூடாது விட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவில் பல மருந்தகங்கள் சட்டரீதியான அனுமதி பெற்றாது இயங்குகின்றன என்றும் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னர் கூறியிருந்தார்.
“மருந்தக உரிமையாளர்கள் சட்டப்படி பதிவு நடவடிக்கை எடுத்தபோதும் பிராந்திய சுகாதார பணிமனையினரின் அசமந்தப் போக்குக் காரணமாக தங்கள் பதிவு நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றது. பணிமனையினர் இழுத்தடிக்கின்றனர். அது தொடர்பில் மாகாண அமைச்சர் கவனம் கொள்ளலாம் தானே? ” என்று குற்றஞ் சாட்டிக் கேள்வியெழுப்புகின்றனர்.இதேவேளை, மருந்தகங்களுக்கு மருந்து வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மருத்துவமனைகளில் இல்லாத சில வகை மருந்துகளை மருத்துவர்கள் வெளிமருந்தகங்களில் பெறுமாறு துண்டு எழுதித் தருகின்றனர். நாம் என்ன செய்வது என்று நோயாளிகளில் சிலர் கேள்வியெழுப்பினர்.