கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். தப்பி ஓடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன.
முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஓடிவருக்கே தகவல்கள் தெரியும் என சந்தேகநபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.
இவ்வாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். தப்பி ஓடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. நெடுங்கேணிப் பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் பகுதி வழியாக புதுக்குடியிருப்பு வீதியில் பயணித்த போதே முச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தமக்கு என்ன நோக்கம் எனத் தெரியாகது அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிஓடியவருக்குதான் கிளைமோர் உள்ளிட்டவை தொடர்பான தகவல் தெரியும் என அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் தப்பி ஓடினர் என முல்லைத்தீவுப் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.