அர்ஜெண்டினா கால்பந்து அணித்தலைவர் லயோனல் மெஸ்சி, குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பியதால் நெட்டிசன்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், அர்ஜெண்டினா 0-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் படுதோல்வியடைந்தது.
இதன் காரணமாக அர்ஜெண்டினா அணியின் தலைவரும், இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவருமான மெஸ்சி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
கிளப் அணியான பார்சிலோனாவிற்காக அபாரமாக விளையாடும் மெஸ்சி, சர்வதேச தொடரில் சிறப்பாக விளையாடியது கிடையாது. இவருக்கு போட்டி வீரராக கருதப்படும் போர்த்துகலின் ரொனால்டோ இந்த தொடரில் 4 கோல்கள் அடித்துள்ளார்.
ஆனால், மெஸ்சி இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அர்ஜெண்டினா அணி சுவிட்சர்லாந்திடம் 1-1 என டிராவும், குரோஷியாவிடம் 0-3 என தோல்வியும் கண்டுள்ளது.
இந்த தலைமுறையின் GOAT (Goat Of All Time) யார் என்ற போட்டி ரொனால்டோவிற்கும், மெஸ்சிக்கும் இடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், மெஸ்சின் சொதப்பலான ஆட்டத்தினால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்து, அவர் GOAT அல்ல Sheep என்று டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.