மேஷம்
உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பதவிகள் உங்களை வந்து சேரும். தொழில்போட்டிகள் விலகும். உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். கடன் பிரச்னை தீரும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.
ரிஷபம்
பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசாங்க விஷயங்களில் காலதாமதம் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பால் வியாபார வாய்ப்புகள் பெருகும்.
மிதுனம்
நீங்கள் புதுப்பொலிவோடும் உற்சாகத்தோடும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் . உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தொழில் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சொத்து வாங்க இந்த நாள் நல்ல நாள்.
கடகம்
பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு. ஆடை ஆபரணம் வாங்க ஆர்வம் மேலிடும். திருமண சுப முயற்சிகள் அனுகூலமான பலன்கள் தரும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் ஏற்படும்.
சிம்மம்
வேளையில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர் மூலமாக உதவி உண்டு. வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.
கன்னி
செய்யும் செயல்களில் தாமதம் பலனாக கிடைக்கும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். அடுத்தவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும். அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். எந்த விடயத்திலும் கவனம் தேவை.
துலாம்
குடும்பத்தில் சுப செய்திகள் கிடைக்க பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார பிரச்னைகள் தீரும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சுபமாக முடியும். உங்கள் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நாள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விடயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும்.
தனுசு
உறவினர்களால் கருத்து வேறுபாடு தோன்றும். வேலையில் தேவையில்லாத இடமாற்றம் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அனுகூல பலன் ஏற்படும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோர் ஆறுதலாக பேசுவார்கள்.
மகரம்
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் உடல்நிலைகளில் உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய உத்திகளை பயன்படுத்துவீர்கள். வேளையில் அதிகாரிகள் கெடுபி அதிகரித்தாலும் கூட இருப்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
எந்த ஒரு கடினமான முயற்சியையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்து லாபம் சம்பாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மீனம்
பிள்ளைகளால் வீண் பிரச்னை ஏற்படும். தொழில் ரீதியான அலைச்சல் இருக்கும். பணவரவு சுமாராக இருக்கும். வேளையில் சக மனிதர்களை அனுசரிப்பதன் மூலம் பிரச்னைகள் குறையும். உறவினர்களால் உதவி உண்டு.