24.06.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஆனி மாதம் 10ம் திகதி, ஷவ்வால் 9ம் திகதி, 24.6.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி காலை 6:54 வரை; அதன் பின் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம் காலை 6:31 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : பெருமாள், சூரியன் வழிபாடு.
மேஷம்:
மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மாமன் மைத்துனர் வகையில் கேட்ட உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
ரிஷபம்:
பிடிவாத குணத்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் வருமானம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் திடீர் செலவு உண்டாகும். வாகனப் பாதுகாப்பில் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும்.
மிதுனம்:
அடுத்தவர் வியக்கும் வகையில் பணியாற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பியதை வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
கடகம்:
பணிகளில் மேம்போக்காக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவருக்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம்.
சிம்மம்:
பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். நல்லவர்களின் அறிமுகமும் ஆசியும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.
கன்னி:
மனதில் எண்ணிய எண்ணம் செயல்வடிவம் பெறும். நண்பரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.
துலாம்:
குடும்ப விஷயத்தைப் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரரின் அன்பும், ஆதரவும் நம்பிக்கை அளிக்கும்.
விருச்சிகம்:
நண்பரின் செயலை விமர்சனம் செய்ய வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
தனுசு:
கடந்த கால அனுபவம் வளர்ச்சிக்கு துணைநிற்கும். புதிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவீர்கள். தொழிலில் வியத்தகு அளவில் அதிகரிக்கும். குடும்பத்தேவை நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை மறையும்.
மகரம்:
மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் மேம்படும். பணக்கடனில் ஒரு பகுதி அடைபடும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
கும்பம்:
சிலரது பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். பணியில் மட்டும் அக்கறை கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம்:
செயலில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல் ஆரோக்கியம் பெறும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.