அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்று, ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை கோவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ மகேஷ் வென்றுள்ளார்.
49 வயதாகும் ஜெயஸ்ரீ மகேஷ் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர். இவருடைய கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.
ஜெயஸ்ரீ மகேஷ் அமெரிக்காவில் கடந்த 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர். இதில் திருமதி உலக அழகி பட்டத்தை ஜெயஸ்ரீ மகேஷ் பட்டத்தையும் வென்றுள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு “திருமதி கோவை அழகி” பட்டத்தையும் 2016 ஆம் ஆண்டு “திருமதி இந்திய அழகி” பட்டத்தையும் வென்றுள்ளார். திருமதி உலக அழகி பட்டம் வென்ற ஜெயஸ்ரீ மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சிறுவயது முதலே சாதிக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்து உள்ளது என்று தெரிவித்தார்.