தினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் உங்கள் ஆயுளை அதிகப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதன் மூலம் பக்கவாதம் புற்று நோய் ஆகியவை உங்களை நெருங்காது என்று உறுதியாக கூறுகின்றனர்.
Mediterranean Diet-ல் ஒரு அங்கமாக இருக்கும் ஆலிவ் எண்ணெய் பற்றிய ஆய்வு குறிப்பை மருத்துவர் சாரா ப்ரயூவர் மற்றும் டயட்டீஷியன் ஜூலியட் கோலா ஆகிய இருவரும் நமக்கு விளக்கமாக சொல்கின்றனர்.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இதய நோய்களில் இருந்தும் , புற்று நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
ஆலிவ் எண்ணெயில் கொழுப்பு சத்து குறைவான அளவில் இருக்கிறது. கடந்த கால ஆய்வுகளில் ஆலிவ் ஆயில் உட்கொள்வதால் கல்லீரல் சிதைவு, முதுமையினால் ஏற்படும் ஞாபகமறதி , பக்கவாதம் , புற்று நோய் போன்றவற்றின் தாக்கங்களை குறைத்து நமது ஆயுள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என்று கூறியுள்ளனர்.
இந்த எண்ணெயில் அதிக கலோரிகள் உள்ளன, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையில் 100 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே மருத்துவர் சாராவும் , ஜூலியட்டும் அளவான அளவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதில் உள்ள வைட்டமின் ஈ நமது சருமத்திற்கும் கண்களுக்கும் நன்மை செய்கின்றன, மேலும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி விடுகிறது.
பிரித்தானியாவில் மூன்றில் ஒருவர் புற்று நோயால் மரணிப்பதாகவும் அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இதய நோய் தாக்குவதாகவும் ஆய்வு கூறுகிறது.
ஆலிவ் எண்ணெய் எவ்வாறு இந்த உயிர்கொல்லி நோய்களை தடுக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி கூட முடிவு படி ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிபெனால்ஸ் ஆரம்ப கால புற்று நோய் செல்களின் அளவை குறைப்பதாக கூறப்படுகிறது.
அதில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் இரு மடங்கு பலன் அளிக்க கூடியது எனவும் பாலிபனால்ஸ் புற்று நோய் செல்களை சுத்தப்படுத்தும் அதே நேரத்தில் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளுறுப்புகளில் வீக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அதனை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
New Jersey யில் உள்ள Rutgers University இன் நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின் 2015ம் ஆண்டில் ஆலிவ் ஆயிலில் அமைந்துள்ள oleocanthal எனும் உட்பொருள் மனித உடலில் புற்று நோய் தாக்கியுள்ள செல்களை மட்டும் அழிப்பதையும் நல்ல செல்களை அப்படியே விட்டு விடுவதையும் கண்டறிந்தனர்.
புற்று நோய் உண்டாக காரணமான லைசோசோம் எனும் செல்களை ஆலிவ் எண்ணெயில் உள்ள oleocanthal கண்டுபிடித்து அழிப்பதை உறுதிப்படுத்த ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்த போது இந்த oleocanthal 30 நிமிடங்களில் லைசோசோம்களை அழிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ தினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை உட்கொள்வது அவசியம்.
MEDITERRANEAN DIET
இந்த டயட்டில் அதிகமான பழங்கள், மீன் வகைகள் மற்றும் சில இனிப்பு குளிர்பானங்கள் மாறும் நொறுக்கு தீனிகள் ஆகியவைதான் முக்கியமான மூல பொருட்கள்.
அதிகமாக சாப்பிட வேண்டியது
பழங்கள் , காய்கறிகள், பாதாம் முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், அத்தி போன்ற விதைகள், மீன் மற்றும் இறைச்சி , ஆலிவ் எண்ணெய் வகைகள்.
குறைவாக சாப்பிட வேண்டியவை
கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட பொருட்களான பழரசங்கள், வெள்ளை பிரட் வகைகள் , சோடா மற்றும் சர்க்கரை ஆகியவை.
பலன் அதிகம் கிடைக்க
ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் அது தருமே ஆரோக்கிய ஷைன்!
எப்படி இதனை பின்பற்றுவது
அதிகம் மீன் வகைகள் சாப்பிட வேண்டும்
ஒவ்வொரு உணவின் போதும் பழங்களையும் காய்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்
உங்கள் வெண்ணை மற்றும் சூரியகாந்தி எண்ணைக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை மாற்ற வேண்டும்.
நொறுக்கு தீனிக்கு பதில் நட்ஸ் வகைகள் சாப்பிட வேண்டும்
டெசர்ட் வகைகளுக்கு பதில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான். உலக பிரசித்தி பெற்ற மெடிட்டெரேனியன் டயட் தற்போது நீங்களும் பின்பற்றுகிறீர்கள் என்று பெருமை கொள்ளலாம். ஆரோக்கியமாக வாழலாம்.