Loading...
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற F8 மாநாட்டின்போது பேஸ்புக் நிறுவனமானது வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு ஓர் நற்செய்தியை தெரிவித்திருந்தது.
அதாவது வாட்ஸ் ஆப் செயலில் ஸ்டிக்கர் ரியாக்ஷன் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.
இதன்படி வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பான 2.18.189 இல் இவ் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
Loading...
எனினும் தற்போது மேம்படுத்தல் பணிகளுக்காக (Develop) செயற்படாத நிலையில் (Disabled) வைக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியானது பேஸ்புக் மெசஞ்சரில் காணப்படும் ஸ்டிக்கர் வசதியை ஒத்ததாகும்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள இவ் வசதியானது அடுத்த பதிப்பு அறிமுகம் செய்யப்படும்போது பயன்பாட்டிற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...