மட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் விவசாய அறுவடைவிழா சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தலைமையில் கல்லூரியின் விவசாயத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பேண்தகு அபிவிருத்தித்திட்டத்தில் பாடசாலை மாணவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் இலங்கை கல்வி அமைச்சினால் நாடளாவியரீதியில் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்தும்,நஞ்சு இல்லாத உணவுகளை இனங்கண்டு அதன்மூலம் ஆரோக்கியமான சமூகமாகவும் வாழவேண்டிய கடற்பாட்டை மாணவர்கள் மத்தியில் வலியுறுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம்.
இதன் கீழ் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரனின் வழிகாட்டல்களின் கல்லூரியின் முதல்வபின் தலைமைத்துவ ஒழுங்கமைப்பில் விவசாயப்பாட ஆசிரியர் பீ.மலர்வண்ணனின் பங்களிப்புடன் கல்லூரியின் மாணவர்களால் இவை உற்பத்திச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது