கருங்கூந்தலே வலுவானது: பொய்
கூந்தலின் வலிமை, நிறத்தைப் பொறுத்ததல்ல. ஆசியர்களின் கருங்கூந்தல் வெள்ளை இனத்தவரின் பொன்னிறக் கூந்தலைவிட வலுவாகயிருந்தாலும் ஆப்பிரிக்கர்களின் கருங்கூந்தல் மிகவும் மென்மையாகவே இருக்கும். சடையை இறுக்கமாகப் பின்னுதல், கூந்தலில் மணிகளைக் கோத்தல், கூந்தல் மீது அதிக வெப்பம் படுவது -ஆகிய செயல்கள், எல்லா வகையான கூந்தலையும் சேதப்படுத்தும்.
அச்சம் நரைமுடியை வரவழைக்கும்: மெய்
அச்சம், மனவுளைச்சல் ஆகியவற்றை உண்டாக்கும் சுரப்பிநீர் (ஹார்மோன்), கூந்தலின் கரு நிறத்துக்குக் காரணமான நிறமிகளின் மரபணுக்களை (மெலனின்) சேதப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.
வெந்தயம் கூந்தலை வலுப்படுத்தும்: பொய்
வெந்தயம் தலையில் பொடுகு வருவதைத் தடுக்கவும் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
ஆனால் அது கூந்தல் வளர்ச்சிக்கோ அதை வலுப்படுத்தவோ உதவும் என்பதற்கு ஆதாரமில்லை.