முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்புச் செயலாளர் மற்றும் சி.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது.
சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர், குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீது சிங்கப்பூரில் ஊழல் வழக்கு பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இலங்கை அதிகாரிகள் உடனடியாக சிங்கப்பூர் அரசாங்கத்தை ராஜதந்திர மட்டத்தில் தொடர்பு கொண்டு அவரை உடனே விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்ற ரகசிய செய்தியும் கசிந்துள்ளது.
இதனை அடுத்து சிங்கப்பூர் அரசு அவரை உடனடியாக விடுதலை செய்து, கொழும்பு செல்ல அனுமதித்துள்ளார்கள். மகிந்த ஆட்சியில் இல்லை. ஆனால் அவரது பவர் இலங்கையில் பாதாளம் வரை பாய்கிறது. இது தான் இன்றைய நிலை.