தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் குட்டி இரந்தது கூட அறியாத தாய் குரங்கு குட்டிக்கு பாலூட்டுவதற்காக சுற்றுத் திரியும் காட்சி அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதுண்டு. அதனால் இந்த முக்கொம்பு பகுதி தமிழ்கத்தில் ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
இந்நிலையில், அங்கிருந்த குரங்கு ஒன்று தனது குட்டி இறந்தது கூட அறியாமல் மூன்று நாட்களாக அதை மார்போடு தூக்கிக் கொண்டு சுற்றி திரிந்து வருகிறது.
இதுமட்டுமல்லாது, இறந்து போன தன் குட்டிக்கு பேன் பார்ப்பது மற்றும் பாலூட்ட முயற்சி செய்வது போன்ற செயல்களை செய்து வருகிறது.
இதைக் கண்ட அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், இந்த சம்பவம் தங்கள் மனதை உலுக்குவதாகவும், தங்களை அறியாமலேயே கண்ணீர் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.