ஒட்டுசுட்டான் கும்பலை பிரான்ஸில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் உறுப்பினரொருவர் வழிநடத்தி வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒட்டு சுட்டான் பிரதேசத்தில் க்ளைமோர் குண்டு, வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் வெடி பொருட்கள் கொண்டு சென்ற நபர்களை பிரான்ஸிலுள்ள புலி உறுப்பினர் ஒருவர் வழிநடத்தியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் புலி செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு காயமடைந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புலி உறுப்பினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு அளிக்கப்படாத 700 புலி உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.