26.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஆனி மாதம் 12ம் திகதி, ஷவ்வால் 11ம்திகதி, 26.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி காலை 8:07 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 9:04 வரை; அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி,
பொது : துர்க்கை வழிபாடு
மேஷம்:
பிறரது பேச்சை பொருட்படுத்த வேண்டாம். நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
ரிஷபம்:
திட்டமிட்ட செயல் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அமோகமாக இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.
மிதுனம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது.
கடகம்:
மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
சிம்மம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.
கன்னி:
பிறர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் இடையூறை உடனே சரிசெய்வது நல்லது. சுமாரான பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
துலாம்:
முக்கிய பணி நிறைவேற தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். பணவரவு மிதமாக இருக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.
விருச்சிகம்:
நற்செயலுக்கான நன்மை தேடி வரும். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவை பெறுவர். கடனில் ஒரு பகுதி அடைபடும். உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு:
மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மகரம்:
பெருந்தன்மையுடன் பிறருக்கு விட்டுக் கொடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து ஓரளவு விடுபடுவர். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
கும்பம்:
யாருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.
மீனம்:
நற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். இயன்ற அளவில் தான, தர்மம் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பரால் உதவி உண்டு.