பெண்களை மயக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் செய்த மோசடியை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிய பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.
மும்பைபாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சு என்ற பெயரில் படமாக்கியுள்ளனர்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்த படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார்.அந்த படத்தின் டிரெய்லரில் ஒரு காட்சியில், தத் தன் வாழ்க்கையில் சுமார் 308 பெண்களுடன் தூங்கி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த படம் ஜூன் 29 ந்தேதி வெளியாகிறதுசஞ்சய் தத் தான் டேட் செய்யும் பெண்ணை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்று இது என் தாயின் கல்லறை என்பார்.
அந்த பெண்ணும் எமோஷனலாகி சஞ்சய் சொல்வதை எல்லாம் கேட்பார். உண்மையில் அந்த கல்லறை அவருடைய தாயுடையது இல்லை. இப்படி தான் சஞ்சய் பெண்களை ஏமாற்றுவார் என்று ராஜ்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை ஒரு பெண் சஞ்சய் தத்தை காதலித்து கழற்றிவிட்டுவிட்டார். இதையடுத்து சஞ்சய் தனது நண்பரின் புது காரை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதினார்.
சஞ்சய் மோதியதில் இரண்டு கார்களுமே சேதம் அடைந்தன. அவர் மோதிய கார் அவரின் முன்னாள் காதலியின் புதுக் காதலின் கார் என்பது அவருக்கு பின்னர் தான் தெரிய வந்தது என்று ராஜ்குமார் தெரிவித்தார்.
சஞ்சய்தத் மாதுரி தீட்சித், டினா மூனிம் மற்றும் ரிச்சா ஷர்மா போன்ற பல நடிகைகளுடன் காதல் கொண்டிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.