Loading...
கடந்த ஆண்டில் ஒருநாள் சேவையின் ஊடாக தேசிய ஆட்பதிவு திணைக்களம் இருபத்து ஐந்து கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.
ஒருநாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்ததன் ஊடாக இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஒருநாள் சேவையின் ஊடாக தேசிய ஆட்பதிவு திணைக்களம் இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரத்து நாநூற்று முப்பத்து எட்டு அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
Loading...
இதேவேளை, கடந்த நவம்பர் மாதத்தில் அதிகளவான தேசிய அடையாள அட்டைகள் ஒருநாள் சேவையின் ஊடாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒருநாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை விநியோகம் செய்வதற்காக ஆயிரம் ரூபா கட்டணம் அறவீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...