பிரதான செய்தி:நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என்று சூளுரைத்துள்ள சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கும் என்று கூறும் கருத்துக்களில் உண்மையில்லை என்று அடித்து கூறியுள்ளார், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர.
இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க ஜனாதிபதியும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினரும் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலிஹத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு யுத்தமொன்றுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் அவரது விசுவாசிகளான சிங்கள பௌத்த கடும்போக்கு தலைமை பௌத்த பிக்குகளும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக இம்முறை மே 18 ஆம் திகதி தமிழர் தாயகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் படுகொலைநாள் பெரும் எடுப்பில் அனுட்டிக்கப்பட்டதை அடுத்து கோட்டாபயவும் அவரது விசுவாசிகளும் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் இந்த சம்பவங்களை தடுக்க மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலிஹத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர? நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கும் என்று கூறும் கருத்துக்களில் உண்மையில்லை என்று அடித்துக் கூறியுள்ளார்.
மேலும்“ நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கப்போவதாக சிலர் மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளனர். நாம் நாட்டை காட்டிக்கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இராணுவ முகாம்களை அகற்றுவதாகவும் கூறுகின்றனர். நாம் எந்தவொரு இராணுவ முகாம்களையும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக அகற்றப்போவதில்லை. இதனை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
முகாமொன்றை அகற்றுவதா அல்லது புதிதாக அமைப்பதா என்ற தீர்மானத்தை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரே தீர்மானிப்பர். நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதம் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அவ்வாறு யாராவது சிந்தித்தால் சிந்திக்கும் அந்த கனமே அதனை அழிக்கும் பலம் எமது ஜனாதிபதிக்கும் இராணுவத்திற்கும் இருக்கின்றது என்பதை நாம் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எவ்வாறாயினும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை சுமத்தி 14 தமிழர்களின் பெயர்களை உள்ளடக்கி சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கம் யூன் 20 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு மறுநாள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி, சீருடைகள் மற்றும் ஆயுதங்களுடன் இருவரை கைதுசெய்திருந்த பொலிசார், இராணுவப் புலனாய்வாளர்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார் ஆகியோருடன் இணைந்து நால்வரை இதுவரை கைதுசெய்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.