உள்ளூர் செய்திகள்:காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து சற்று முன்னர் நடைபெற்றுள்ளது. காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துடன் வான் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது வானில் பயணித்த பலர் விபத்தின் காரணமாக காயமடைந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமுற்ற பயணிகளை பிரதேச வாசிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போதைக்கு ஐந்துக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான தகவல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று விரைந்துள்ளது