எவ்வளவு பாதுகாத்தாலும், இன்றைய இளைஞர் யுவதிகளின் முகத்தில் ஏற்படும்கரும்புள்ளிகள், முகப்பருக்களை மறைக்க முடியாமல் போய்விடுகின்றது.
நாளடைவில் அது முகத்தில் பரவி முக அழகையே கெடுத்துவிடும். இதனை போக்க முடியாமல் பலர் காலம் காலமாக போராடி வருகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். வெள்ளையாக இருப்பவர்களுக்கு கரும்புள்ளி ஏற்பட்டுவிட்டால் முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும்.
இவ்வாளவு சிக்கலை ஏற்படுத்தும் இந்த கரும்புள்ளிக்கான காரணம் என்ன என பார்ப்போம்.
முகத்திலும், கழுத்திலும், முதுகிலும், கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழேயும் கரும்புள்ளி ஏற்படும். முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி நிறைய வாய்ப்புகள் உண்டு.
- ஊட்டச்சத்து குறைவு
- மலச்சிக்கல்
- முகப்பரு
- பருக்களை உடைத்தல்
- காயங்கள்
- முகத்தில் அதிக எண்ணெய்
- உடலில் அதிக வெப்பம்
- பருவக் கோளாறு
- பிழையான உணவு பழக்கங்கள் போன்றவைகளும் இந்த கரும்புள்ளிகளுக்கு காரணமாகிவிடும்.
அத்துடன், கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருமத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அந்த இடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றிவிடும். சருமத்துகளைகளில் அழுக்குள் தங்கி கட்டிகளாகிவிடும். இதனை கையால் எடுக்க முயற்சித்தால் ஆபத்தாகிவிடும்.
இவ்வாறு கையில் எடுக்க முயற்சிப்பவர்கள் அதனை உடனடியாக நிறுத்திவிடுங்கள். இல்லை என்றால் கரும்புள்ளிகளை நீக்குவது கடினமாகிவிடும்.
இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைகளை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொண்டாலும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு தீர்வு என்ன?
பேக்கிங் சோடாவை பயன்படுத்தி இந்த கரும்புள்ளிகளை நீக்கிவிடலாம். பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி சற்று நேரத்தின் பின்னர் ஈரமான துணியால் துடைத்தால் மெல்ல மெல்ல கரும்புள்ளி மறைந்துவிடும்.
பட்டை பொடியில் தேன் அல்லது எலுமிச்சை சாறு பயன்படுத்தி பேஸ்ட் செய்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவினால் கரும்புள்ளியை மறைத்து விடலாம்.
எலுமிச்சை சாறு பயன்படுத்தினாலே போது. அதிகம் ப்ளீச்சிங் தன்மையை எலுமிச்சை சாறு கொண்டுள்ளமையினால் காலப்போக்கில் சிறந்த தீர்வை அது வழங்கும்.
அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் தயிர் பயன்படுத்தலாம். தயிருடன் ஓட்ஸ் பொடியை பேஸ்ட் செய்து பயன்படுத்தினால் இறந்த செல்கள் உயிர் பெற்று சருமம் பொலிவு பெற்று கரும்புள்ளியை மறைக்கும்.
தேன் பயன்படுத்தினால் போது. எனினும் தலை முடி, புருவங்களில் படாமல் கரும்புள்ளி உள்ள இடத்தில் தேன் தடவி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
அனைவரும் வீட்டில் உள்ள இலகுவான பொருள் தான் இந்த கீரீன் டீ. அதன் இலைகளை பயன்படுத்தி ஸ்கரப் செய்தால் கரும்புள்ளியை நீக்கலாம்.
அத்துடன் அனைத்து முகப்பிரச்சினைக்கும் தீர்வு தரும் பால் பயன்படுத்துங்கள். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பால் பயன்படுத்தி துடைத்து வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு பயன்படுத்தினால் புதிய செல் பெற்று கரும்புள்ளியை போக்கலாம்.
அத்துடன் தவறாமல் தினமும் குறைந்தது 3 முறை முகம் கழுவி வர வேண்டும். முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கினாலே கரும்புள்ளிகளில் இருந்து விடுதலை பெறலாம்.