சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா பாலியல் துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.
இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், காட்டுப்புலம் – பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.