கணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் நண்பரை மனைவி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீட்டீ (34) என்ற ஆணுக்கும், ஏஞ்சிலா என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டீ தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவரே உலகம் என வாழ்ந்து வந்த ஏஞ்சிலாவுக்கு பீட்டீயின் திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
பீட்டீயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் ஏஞ்சிலாவுக்கு ஆறுதல் கூறிய நிலையில் பின்னர் ஒவ்வொருவராக தங்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்க சென்றுவிட்டார்கள்.
இந்நிலையில் தனி மரமாக தவித்த ஏஞ்சிலாவுக்கு பீட்டீயின் உயிர் நண்பர் ஆண்ட்ரூ ஆறுதலாக இருக்க தொடங்கினார்.
வாழ்க்கையே முடிந்துவிட்டது என எண்ணியிருந்த ஏஞ்சிலாவுக்கு ஆண்ட்டூவின் அரவணைப்பு மனதுக்கு இதமாக இருந்தது.
இவர்களின் நட்பை பீட்டீயின் குடும்பத்தார் ஏற்காத நிலையில் இருவரையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள்.
அப்போது தான் தங்களிடையில் இருப்பது தவறான உறவு இல்லை, உன்னதமான காதல் என்பதை பீட்டீயும், ஏஞ்சிலாவும் உணர்ந்தார்கள்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது ஏஞ்சிலா கர்ப்பமாக உள்ளார், ஆண்ட்ரூ தன்னை மிக அன்பாக கவனித்து கொள்வதாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பீட்டீ கூறியுள்ளார்.