கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை கடந்த 23 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியனிடம் முன்னிலைபடுத்தியபோது, நீதவான் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையொன்றை கொலை செய்து சித்திரவதை செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பலர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியை அடிப்படையாக கொண்டே குறித்த நான்கு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.