சமீபத்தில் ஜோர்டான் மன்னர் மற்றும் ராணியுடனான சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபரின் மனைவியான Karen Pence-இன் உடை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
”தயவு செய்து உடனடியாக ஒரு உடை வடிவமைப்பாளரை கண்டுபிடியுங்கள், ஜோர்டான் ராணிக்கருகே உட்கார்ந்திருக்கும் நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள்” என ஒருவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
இந்நிலையில் குவாதிமாலாவில் எரிமலையின் சீற்றத்திற்கு தங்கள் வீடுகளை இழந்த குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல தனது கணவருடன் அங்கு சென்றிருந்த அமெரிக்க துணை அதிபரின் மனைவியான Karen Pence செய்த செயல், எந்த பத்திரிகைகள் அவரை நாகரீகம் தெரியாதவர் என வர்ணித்தனவோ அதே பத்திரிகைகள் உலகிலேயே அழகான நாகரீகமான பெண் அவர்தான் என கூற வைத்துள்ளது.
ஒரு புறம் பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளை காணச்சென்ற அதிபர் டிரம்பின் மனைவி “எனக்கென்ன கவலை” என்ற வாசகம் அணிந்து விமர்சனத்துக்குள்ளாக, துணை அதிபரின் மனைவியோ தனது அன்பால் பலரது இதயங்களைத் தொட்டிருக்கிறார்.
வீடிழந்த குழந்தை ஒன்றை அள்ளி அணைத்து அவர் கொஞ்சும் புகைப்படம் ஒன்று காண்போர் மனதைத் தொடுகிறது.
இந்த மனிதாபிமானம் மிக்க மங்கைக்கு எதற்கு ஒரு உடை வடிவமைப்பாளர் என பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.
தனது அன்பால் உலகிலேயே தான் அழகானவர், உயர்ந்தவர், நாகரீகமானவர் என நிரூபித்து விட்டார் Karen Pence.