யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்
சென்ற ஆறு நபர்கள் குறித்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
தொடர்ந்து வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்தும் அங்கிருந்த கணினி மற்றும் கதிரைகளை குறித்த கும்பல்
சேதப்படுத்தியதுடன் அவற்றை தீ வைத்தும் கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நான்கு நாட்களாக தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திலே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை எந்தக் குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொள்வதும் வழமையான ஒரு செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.