வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபா பணத்தை மட்டுமே தமது சட்டைப் பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை இலங்கை பொலிஸ் தலைமையகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இலஞ்சம் பெறுவதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது எஎன்று பொலிஸ் தலைமையகத் தகவலை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடமைக்குச் செல்வதற்கு செல்ல முன்னர் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தமது பணப்பையை பொறுப்பதிகாரியிடம் காண்பித்துச் செல்ல வேண்டும்.
மேலும் பொலிஸ் நடமாடும் பிரிவிரினர், வீதிக் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிஸாரின் பணப்பையை சோதனையிடுவதற்கும், புதிய நடைமுறையில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை வடக்குப் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 300 ரூபா பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.