Loading...
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் பயந்ததில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கே பயப்படாத நாங்கள் கோட்டாவிற்கு பயப்படப்போகின்றோமா எனவும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் மற்றும் சமுர்த்தி பயனாளிகளையும் அறிவூட்டும் செயலமர்வு நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
Loading...
மேலும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட அமெரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Loading...