Loading...
அம்பலாந்தொட்ட – பரவகும்புக பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பரவகும்புக – சமனல கிராமத்தை சேர்ந்த 42 வயதான நபரே இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading...
மூத்த சகோதரருடன் காணப்பட்ட முறுகல் நிலை முற்றி ஏற்பட்ட வாய்த்தகராறில், மூத்த சகோதரரால் இளைய சகோதரர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
Loading...