Loading...
நீர்கொழும்பு பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாக கூறப்படும், விளையாட்டு ஆலோசகர் ஒருவரை நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று (30.06.2018) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தி சென்றமை, கப்பம் கோரியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் நீர்கொழும்பை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத வர்த்தகரின் மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முகநூல் ஊடாக காதல் தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Loading...