லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் ஏற்பட்ட தீயை, 58 தீயணைப்பு துறை வீரர்கள் போராடி அணைத்தனர்.
லண்டன்:
லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு 90க்கும் மேற்பட்ட போல்கால்கள் வந்துள்ளது. இதையடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்களில் 58 வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.
அவர்கள் அங்கு செல்வதற்குள் கட்டிடத்தில் இருந்த 40 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 3 பேரை மீட்டனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.
நல்ல வேளையாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் 12-வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் 13-வது மாடியின் பால்கனி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.