வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடு தவறானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் கௌரவமாக அவர் பதவி விலக வேண்டும் என மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி துறை அமைச்சராக தொடர்ந்தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப்பார் என கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலே எதிர்க்கட்சி தலைவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசாவின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர், வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை துறக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.