மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமில்லாமல், இவரது நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’, ஆகிய படங்களின் வேலையையும் பார்த்து வருகிறார். டி.வி. நிகழ்ச்சியிலும் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அரசியலுக்கு ஆயுதமாக பயன்படுத்தி வரும் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர், நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று கேட்க, நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்’ என்றார்.
உங்களின் தம்பி விஜய் அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா? என்றதற்கு, எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.