பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் உபேர் டாக்ஸிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் சிக்கி 4 இளைஞர்கள் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர்.
லீட்ஸ் நகரின் Horsforth பகுதியில் அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர், அதில் ஒருவர் நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஆறு பேரும் எதிரே வந்த உபேர் டாக்ஸியுடன் நேருக்கு நேர் சக்தியாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் இளம்பெண் ஒருவர் நசுங்கிய காரில் இருந்து தவழ்ந்து வெளியேறியதாக கூறப்படுகிறது, எஞ்சிய இருவர் வெளிவர முடியாதபடி காருக்குள் சிக்கிக் கொண்டனர்.
உபேர் ஓட்டுனரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது, விபத்தில் மிக மோசமாக சேதமாகியுள்ள இரு வாகனங்களும் மீட்பு வாகனத்தால் சம்பவப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.