Loading...
ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்தில் பள்ளிக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் மூன்று பேர் தலைகளை துண்டித்து கொன்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைபகுதியில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவ்வப்போது ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
Loading...
இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியை நேற்று தீவைத்து எரித்த பயங்கரவாதிகள், அந்தப் பள்ளியில் இருந்த மூன்று பணியாளர்களின் தலையை வெட்டிக் கொன்றனர்.இந்த சம்பவத்தில் பள்ளியின் நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
Loading...