02.07.2018 திங்கட்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஆனி மாதம் 18ம் திகதி, ஷவ்வால் 17ம் திகதி, 2.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:26 வரை; அதன்பின் பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 11:10 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : முகூர்த்தநாள், சிவன் வழிபாடு.
மேஷம்:
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.
ரிஷபம்:
எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.
மிதுனம்:
கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
கடகம்:
உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
சிம்மம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.
கன்னி:
உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும் பிள்ளைகள் வெகுநாள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் எதிபார்த்த நன்மை கிடைக்கும்.
துலாம்:
பொது விஷயங்களில் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.
விருச்சிகம்:
பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.
தனுசு:
எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.
மகரம்:
பணிச்சுமை உருவாகி அல்லல் தரலாம். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவை. மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.
கும்பம் :
உறவினரிடம் இருந்த உங்கள் மீது கொண்ட மனஸ்தாபம் சரியாகும். தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.
மீனம்:
சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து ஆலோசிப்பர். பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.