சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கு முன்னர், சுவிட்சர்லாந்து சிறையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், என புதிய அறிக்க்கை வெளிவந்துள்ளது. புகலிடம் கோருவோரில் ஐந்தில் ஒருவரின் கோரிக்கை நிராகரிக்கப்படும் அதே வேளை, நாடு கடத்தப்படும் வரை அவர்கள் காவலில் வைக்கப்படுகிறார்கள். இதன் போது அவர்களின் இளம் பிள்ளைகளும் அவர்களுடன் தடுத்து வைக்கப்படுவதாக பாராளுமன்றக் குழு ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக இந்த நடைமுறை அனுமதிக்கப்படுவதாக தேசிய கவுன்சில் கட்டுப்பாட்டு குழு குற்றம் சாட்டியுள்ளது.
இது தவறு என இதை செய்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த குழு கேட்டுக் கொண்டது.
அந்த பகுதியின் பிரதிநிதி Roger Schneeberger, இந்த செயல்பாட்டை உறுதிபடுத்தினார். இது பற்றி அவர் கூறும் போது, “ஆம் 15 வயதுக்கு கீழ் பட்ட பிள்ளைகள் இவ்வாறு தடுத்து வைக்கப்படுவது உண்டு, எனினும் அவர்களின் சம்மதத்துடன்”, என அவர் கூறினார்.
நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் கிடைக்காததால், எத்தனை குழந்தைகள் இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.