Loading...
யாழ்ப்பாணம் தென்மராட்சி நாவற்குழிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் தென்மராட்சி கல்வயல் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவன் வேலைவாய்ப்பு கிடைக்காமையின், காரணமாக மனமுடைந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Loading...