சனிக்கிழமையன்று பெர்ன் மண்டலத்தில் ஒரு தனியார் கேபிள் காரில் இருந்து விழுந்ததால் நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.four injured Swiss cable car accident
Kandertal பள்ளத்தாக்கில் உள்ள Alp Unterniesen பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது கீழே விழுவதைக் கண்ட சிலர் பொலிசாருக்கு அந்த விபத்து குறித்து அறிவித்தனர்.
இதில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் விபத்தில் படுகாயம் அடைந்த போது, ஒருவர் மட்டும் காயங்கள் ஏதும் இன்றி தப்பினார் என பொலிசார் தெரிவித்தனர்.
மூன்று ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தன, காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இரு பெண்கள் சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லக் கூடியதாக இருந்த போதும், மற்ற ஆணும் பெண்ணும் பலத்த காயங்களுக்கு உள்ளானதால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவம் இப்போது பொலிஸால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.