தவறான முடிவெடுத்து பட்டதாரி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார், படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியிலேயே அவர் தற்கொலை செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றுப் (02) பகல் தென்மராட்சி, கச்சாய் துறைமுகச்சாலையில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன் (29) வயது என்பவரே உயிரிழந்துள்ளார்.
இறப்புத் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று மாலை நீதிவானுக்கு அறிக்கையிட்டனர். நீதிவான், பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் இறப்பு விசாரணைகளை நடத்தி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப் பணித்தார்.
உயிரிழந்த இளைஞன் கைப்பட எழுதினார் என்று தெரிவிக்கப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. “பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனது குடும்பத்துக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. படித்தும் வேலை கிடைக்கவில்லை” என்று அதில் உள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது