மல்லாகம் சந்தியிலுள்ள காங்சேன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சூடு நடத்தி தற்கொலை செய்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் சார்ஜனாக கடமையாற்றும் 25 வயதுடைய என்.நஸீர் என்னும் திருகோணமலையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தன்னைத் தானே சுட்டு உயிர் மாய்த்தார் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குனிந்து நின்று தனது நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டார் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து அவரது ஏகே47 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது