யூலை பத்தாம் திகதி றோயல் எயார் போர்ஸ் Royal Air Force எனப்படும் பிரித்தானிய வான்படைக்கு அதன் நாட்குறிப்பில் மிக முக்கியமான ஒரு பரப்பான நாள். அன்றுதான் லண்டன் வானில்
F-35 ரொர்னார்டோ> ரைபூன்போன்ற அதிநவீன போர்விமானங்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட வான்கலங்கள் பறக்கப்போகின்றன. வான்கலங்களின் காதைப்பிளக்கும் இரைச்சலால் லண்டநகரமும் அதன் சுற்று வட்டாரங்களும் அதிரப்போகின்றன.
இதென்ன பிரித்தானியாவின் பாரியபோர் ஒத்திகையா? என அச்சமடையத்தேவையில்லை. பிரித்தானிய வான்படை தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடுவதால் இவ்வாறு ஒரு பெரும் வான் அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இவ்வாறு 100 வான்கலங்கள்ஒரேதடவையில் லண்டன் வான்பரப்பில் பறப்பது இதுதான் முதன்முறை.
இதனால் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திமுடிக்க வேண்டிய பரபரப்பில் வான்படை உள்ளது. ஏனெனில் பிரித்தானிய வான்படையும் கடந்த 100 ஆண்டுகளில்செய்யாத சாதனை இது.
முதலாம் உலகப்போரின் முடிவில் 1918 இல் உருவாக்கப்பட்ட பிரித்தானிய வான்படை உலகின் பழைய வான்படைகளில் ஒன்று இது ராணுவம் மற்றும் கடற்படைகளில் தங்கியிராத ஒரு சுயாதீனமான கட்டமைப்புக்குரிய பதிவையும் கொண்டது. இந்த நிலையில் அது தனது நூற்றாண்டு விழாவுக்காக நூறுவான்கலங்களை அணிவகுப்பு செய்யவுள்ளது.
தற்போது சில வான்தளங்களில் இந்த நிகழ்வுக்குரிய தீவிரமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தமது வாழ்நாளில் காணக்கிடைக்காத இந்த அரியவான்கலங்களை ஒரேதடவையில் கண்களிக்கும் ஆர்வத்தில் லண்டன்வாசிகள் மட்டுமல்ல உல்லாசப்பயணிகளும் யூலை பத்தாம் திகதிக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் இவ்வாறு 100 வான்கலங்கள்அணிவகுத்து பறந்து செல்லும் நகர்வுக்கு ஒரேயொரு தடையாக காலநிலை மட்டுமே உண்டு. தற்போது இருப்பதை போல தெளிவான வானம் இருந்தால் விமானங்கள் அனைத்தும் சீறிச்செல்லும். காலநிலை ஒத்;துழைக்காமல் விட்டால் சில விமானங்களி;;ன் பறப்பு மீளெடுக்கப்படும் என விங் கொமாண்டர் கெல் ஹற்லான்ட் தெரிவிக்கின்றார்.
சரி எந்தெந்த முக்கிய வான்கலங்கள் பறக்கப்போகின்றன?
Stealth fighter F-35 The Hercules, Atlas A400M, C-17, BAe146, Sentinel, Voyager, Shadow, Rivet Joint, E-3D Sentry, Tornado GR4, Typhoon ,DakotaLancaster ,Hurricane, Spitfire Prefect, Tucano and Hawkm, and Red Arrows .helicoptersincluding the Puma, Chinook, Juno and Jupiter