2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் இடம்பெற்று வருகின்றது.
இதில் நாக் அவுட் சுற்றில் கொலம்பியா – இங்கிலாந்து அணிகள் மோதியது.
அதற்கமைய பெனால்டி ஷூட் முறையில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.
4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே எந்த அணிகளும் கோல் போடவில்லை. எனினும் கடும் முயற்சியில் இரண்டு அணிகளும் காணப்பட்டது.
இந்த நிலையில் போட்டியின் 40வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து வீணடித்தது. அதற்கயை முதல் பாதி கோல் அடிக்காமல் சமநிலையில் முடிந்தது. போட்டியின் 2வது பாதி பெனால்டி வைப்பை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து கோல் அடித்தது. 57வது நிமிடத்தில் இந்த கோல் அடிக்கப்பட்டது.
93வது நிமிடத்தில் கொலம்பியா கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தது. பெனால்டி வாய்ப்பில் இரண்டு அணிகளும் 2 கோல் அடித்தது. 3வது வாய்பையும் பயன்படுத்தி கொலம்பியா 3வது கோலை அடித்தது. அடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இங்கிலாந்து 3வது கோல் அடித்தது. இறுதி சந்தர்ப்பத்தை கொலம்பியா வீணடித்த போதிலும், சரியாக பயன்படுத்திய இங்கிலாந்து அணி 4வது கோல் அடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.