பிரேசில் அணியின் நட்சத்தி வீரர் நெய்மரை மெக்சிகோ அணி பயிற்சியாளர் தாக்கி பேசியதனால் அவர் கடுப்பாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேசில் – மெக்சிகோ அணியுடனான போட்டியில், மெக்சிகோ அணி தோல்வியடைந்தது.
தோல்வி குறித்து பேசிய மெக்சிகோ அணி பயிற்சியாளர், தங்கள் தோல்விக்கு காரணம் நெய்மர் என்பதனை போன்று அவர் தாக்கி பேசியிருந்தார்.
போட்டியின் போது காயம் ஏற்பட்ட போது நெய்மர் நடிப்பது போன்று இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் போட்டியில் 3 நிமிட தாமதம் ஏற்பட்டது. இதுவே தங்கள் தோல்விக்கு காரணம் என மெக்சிகோ அணி பயிற்சியாளர் தெரிவித்தள்ளார்.
இவ்வாறான நடிப்பு கால்பந்தாட்டத்திற்கு நல்லதல்ல எனவும் இது கால்பந்தாட்டத்திற்கு ஏற்படுத்தும் அவமானம் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நெய்மர், என்னை பலவீப்படுத்த இவ்வாறு கூறப்படுகின்றது. விமர்சனங்களை நான் மதிப்பதில்லை. பாராட்டுக்களையும் கண்டுக்கொளதில்லை. இது வீரரின் அனுகுமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். வெற்றி மாத்திரமே எனது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.