தமிழிழ விடுதலைப் புலிகளினால் வருடாந்தம் யூலை ஐந்தாம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வந்த கரும்புலி நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்முதற் கரும்புலியான மில்லரின் வீர மரணத்தை நினைவகூரும் நிகழ்வுகள் பகிரங்கமாகஇடம்பெற்றிருக்கவில்லை.
எனினும் இம்முறை யாழ்ப்பாணத்திலுள்ள கரும்புலி மில்லரின் நினைவுஇடத்தில் இன்றைய தினம் கரும்புலி நாள்நினைவுகூறப்பட்டுள்ளது. மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த யாழ்ப்பாணம் நெல்லியடியில் இன்றுமதியம் இந்த நினைவுகூரல் இடம்பெற்றிருந்த்து.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின்ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது மாவீர்ர் ஒருவரின் உறவினர் தீபச் சுடரைஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்தவர்களால் அஞ்சலிசெலுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழிழ விடுதலைப் புலிகளின்முதற் கரும்புலியாக கப்டன் மில்லர் வீரச்சாவடைந்திருந்தார். அவரின் நினவைஅனுஸ்டிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் யூலை ஐந்தாம் திகதி கரும்புலிநாள் நினைவு கூரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.