முகத்தை அழகாக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த சாதாரண அறிவுடன் செயற்படுவது அவசியமாகும்.
அதற்கமைய,
01. இரவு நேரங்களில் முகத்திற்கு கீரீம் ஒன்றும் பயன்படுத்தாதீர்கள். நித்திரியின் போது உடல் வளர்ச்சியடையும். தோல் சுத்தமாக இருக்கவில்லை என்றால் அது வளர்ச்சியை பாதிக்கும். இதனால் cleanser வகைகளை பயன்படுத்தி இரவு நித்திரைக்கு செல்வதற்கு முன்னர் அகற்றி கொள்ள வேண்டும்.
02. அளவு அதிகமாக கூந்தலை உலர வைக்க வேண்டாம். பலர் கூந்தலை உலர வைப்பதற்கு dryerயை பயன்படுத்துகின்றனர். இந்த பழக்கம் இருந்தால் கைவிடுவது நல்லது. இயற்கையாகவே உலர வைக்க வேண்டும். உலர வைக்க கூடிய நேரத்தில் குளிப்பதனை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். dryer பயன்படுத்தி உலர வைத்தால் முடி சேதமடையும்.
03. முகப்பருக்களை நகங்களினால் உடைக்க வேண்டாம். அதன் வேர் வெளியேறவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பரு ஏற்படும். பருக்களை உடைப்பதனால் சருமம் சேதமடைந்து இயற்கை தன்மையை இழக்கின்றது. இதனால் பக்டீரியாவின் தொற்று ஏற்படும். அதில் வெளியேரும் திரவம் சர்மத்தின் பல இடங்களில் பரவில் முகத்தின் அழகை கெடுக்கும். அத்துடன் கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும் என்பதனை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
04. நகங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நகபூச்சுகளை பலர் பூசுகின்றனர். ஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் போதும் நகம் இயற்கையாகவே அழகாக காட்சியளிக்கும். அதற்கு நகபூச்சுகள் அவசியம் இல்லை என்பது பலருக்கு தெரியாது.
05. அளவுக்கு அதிகமாக மேக்கப் செய்ய கூடாது. அதனை தவிர்க்க முடியாதவர் சாதாரண அளவு மேக்கப் செய்யலாம். அதிகமாக செய்தால் காலப்போக்கில் சருமம் சேதமடைந்து பொலிவை இழக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும்.