Loading...
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று (05.07.2018) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஜீலை 5 கரும்புலிகள் தினமான இன்று யாழ். குடா நாட்டின் பல இடங்களிலும் கரும்புலி நாள் நினைவுகள் இடம்பெற்றிருந்தன.
Loading...
நெல்லியடி மற்றும் வல்வெட்டிதுறையில் இன்று மதியமும், மாலையும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது மாவீரர் ஒருவரின் உறவினர் தீபச் சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்தவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று மாலை 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...