டெல்லியில் 11 பேர் இறந்தவர் வீட்டில் இருந்த தடையங்கள் மற்றும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் 4 ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் ஒரு வீட்டின் அறையில் சடலமாக கடந்த வாரம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மர்மமான முறையில் 9 பேரின் உடல்கள் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார். 11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, பொலிஸ் விசாரணையின் போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் இரண்டு டயரிகள் கிடைத்துள்ளன. மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்துள்ளது என்று பொலிசாருக்குக் கிடைத்த குறிப்புகள் வைத்து யூகிக்க முடிகிறது.
காகிதக் குறிப்பில், ‘மனித உடல் தற்காலிகமானது. இந்த பயத்தைப் போக்க கை, வாயை மூடிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல டயரிகளிலும், ‘பாத் பூஜா’ குறித்த குறிப்புகள் இருந்துள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. பிரேத பரிசோதனையில் அவர்கள் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன் நடந்த சி.சி.டி,வி காட்சி வெளியாகியுள்ளது.
இந்த மரணத்தில் பல்வேறு மர்ம தடையங்கள் கிடைத்து வருவதால் பொலிசார் மேலும் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.